இன்று போபால் விஷ வாயு கசிவு கொடூரத்தின் 26வது நினைவு தினம்
Subscribe to Oneindia Tamil
போபால்: போபாலில் விஷவாயு கசிவு விபத்து நடந்து ஆயிரக்கணக்கானோர் பலியானகி இன்றுடன் 26 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த வலி இன்னும் மறக்கப்படவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து நச்சு வாயுவான மெதில் ஐசோசைனைட் வாயு கசிந்தது.
இதில் ஒரே இரவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். மேலும், அதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்ததடுத்த வருடங்களில் இறந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் பல்வேறு உடல்நல க்குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். அவ்வாறு உயிர் பிழைத்த 500 பேர் கையில் டார்ச் ஏந்தி யூனியன் கார்பைடு ஆலை வரை பேரணி நடத்தினர்.












Click it and Unblock the Notifications