விடுதலைப் புலிகளின் புதிய மையம் கேரளா?
டெல்லி: கேரளாவில் வி்டுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியக் கூறுகள் தெரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடபிலான ஆவணப்படம் ஒன்று, திருவனந்தபுரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக 'ஐ.பி.என் லைவ்' தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழின படுகொலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட 'முல்லைத்தீவு சாகா' என்ற ஆவண திரைப்படம் திருவனந்தபுரம் அருகே மண்டபத்தில் ஒளிபரப்பப்பட்டது.
மிகவும் ரகசியமான முறையில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைவர்களின் கூட்டம் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் கேரள போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டது. ஆனால் இந்த கூட்டம் நடந்ததற்கான எந்த தடயங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் முல்லைத்தீவு சாகா திரைப்படம் காட்டப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது.
இனி இம்மாதிரி படங்களைத் திரையிடுவது நிறுத்தப்படுமா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "இந்தத் திரைப்படத்தாலோ, அதைத் திரையிட்டதாலோ இந்திய இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே தடை ஏதுமில்லை" என்று தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications