டிச. 7ல் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் : மழை நிலவரம் குறித்து ஆய்வு
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது. இதில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதுவரை மழைக்கு 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் குழுவை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரவையின் அவசரக் கூட்டம் வரும் 7-ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இதில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.
இது குறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
முதன்மை செயலாளர்கள் வி. கே. சுப்புராஜ் (சுகாதாரம்), பி. டபுள்யூ. சி. தாவிதர் (மின்சாரம்) அடங்கிய அதிகாரிகள் குழு மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களை வரும் 5, 6 ஆகிய தேதிகளில் பார்வையிடுகின்றனர்.
அவர்கள் பயிர்கள், சாலைகள், மற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்கின்றனர். மேலும், அம்மாவட்டங்களில் நடந்து வரும் நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிடுகின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications