டிரக் ஓட்டுநரிடம் வழிப்பறி செய்ய முயன்ற 4 சிறைக் காவலர்கள் கைது
பனாஜி: கோவாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் டிரக் ஓட்டுநரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற 4 சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சி. எல். பாட்டீல் கூறியதாவது.
நேற்றிரவு பனாஜி-பாண்டா நெடுஞ்சாலையில் டிரக் ஓட்டுநரை 4 சிறைக் காவலர்கள் வழிமறித்தனர். அவர்கள் பனாஜியில் இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் குந்தைம் கிரமாத்துக்கு அருகே வைத்து அந்த ஓட்டுநரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருப்பவற்றை கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் வேன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று டிரக் அருகில் வந்துள்ளது. இதை பார்த்த அந்த 4 பேரும் அங்கிருந்து 2 பைக்குகளில் தப்பிக்க முயன்றனர். அவரக்ளை நெடுந்தூரம் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அன்குஷ் நாயக், விஷால் நாயக், கேஷவ் கவாஸ் மற்றும் தினேஷ் வாரங் என்று தெரிய வந்தது. அவர்கள் இருட்டில் தங்களை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க கருப்பு கால்சட்டையும், டி ஷர்டும் அணிந்திருந்தனர்.
டிரக் ஓட்டுநர் அவரிடம் இருந்த பணத்தையும், செல்போனையும் தரமறுத்ததையடுத்து அவர்கள் ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர் என்று டிரக் உரிமையாளர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications