ஜெயின் பண்டிகைக்காக இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூட முடியாது-உயர்நீதிமன்றம்
சென்னை: ஜெயின் சமூகத்தினரின் பண்டிகையையொட்டி, இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை இறைச்சி வியாபாரிகள் சங்க செயலாளர் அன்வர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில்,
மகாவீர் ஜெயந்தியன்று அரசு உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளை மூடி வருகிறோம். இந்நிலையில் ஜெயின் சமூகத்தினரின் பர்சன் பர்வா பண்டிகைக்காகவும் இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடுமாறு உத்தரவிட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஜெயின் மகா மண்டல் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அரசு பலீசிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் அரசுக்கு மனு ஒன்றை கொடுத்திருக்கிறோம். அதை பரீசிலிககுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் அன்வர் பாட்ஷா.
இதை விசாரித்த நீதிபதிகள் எலிபே தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஜெயன் சமூகத்தினரின் பண்டிகைக்காக இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடும்படி உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications