For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அழகி நிக்கோல் பரியா மிஸ் எர்த் டேலன்ட் 2010 ஆக தேர்வு

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: வியட்நாமில் நடந்த மிஸ் எர்த் 2010 அழகிப் போட்டியில், இந்தியாவின் நிக்கோல் பரியா முடி சூட்டப்பட்டார்.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடந்த இப்போட்டியில் இறுதிப் போட்டியில் மொத்தம் 17 பேர் பங்கேற்றனர். இவர்களில் நிக்கோல் பரியா வெற்றி பெற்றார்.

20 வயதே ஆகும் பரியா பெங்களூரைச் சேர்ந்தவர். அட்டகாசமான இறுதிப் போட்டியின் போது பெல்லி நடனம் உள்ளிட்ட கண்கணவர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பரியாவின் வெற்றி குறித்து அவரது தந்தை இயான் பெங்களூரில் கூறுகையில், இந்த செய்தியைக் கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் பரியா வெல்வார் என்பதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தோம் என்றார்.

இந்த நிழ்ச்சியின் மூலம் 100 மில்லியன் வியட்நாம் டாங் பணம் வசூலானதாம். இதை அப்படியே உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அளிக்கின்றனர். மத்திய வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி செலவிடப்படவுள்ளது.

மொத்தம் 84 அழகிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளின் இறுதியில், 17 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

மிஸ் எர்த் போட்டியில் மிஸ் கான்ஜெனிலிட்டியாக கெளதமாலா அழகி சூ எல்லன் காஸ்டென்டாவும், சிறந்த தேசிய உடை அழகியாக ஜப்பானின் மரினா கிஷிராவும், மிஸ் போட்டோஜெனிக்காக தாய்லாந்தின் வாட்ஸபோர்ன் வாட்டனகூன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட அழகிப் போட்டிகளில் முதலிடம், 2வது, 3வது இடம் என்று உண்டு. ஆனால் மிஸ்எர்த் போட்டியில் அப்படி இல்லை. முதலிடத்தைப் பெறுபவருக்கு மிஸ் எர்த் அழகிப் பட்டம் தரப்படும். 2வது இடத்தைப் பிடிப்பவருக்கு மிஸ் ஏர் பட்டமும், 3வது இடத்தைப் பிடிப்பவருக்கு மிஸ் வாட்டர் பட்டமும், 4வது இடத்தைப் பிடிப்பவருக்கு மிஸ் வாட்டர் பட்டமும் தரப்படும்.

அந்த வகையில், 2வது இடத்தைப் பிடித்த ஈகுவடார் அழகி ஜெனிபர் பஸ்மினோ மிஸ் ஏர் பட்டத்தையும், 3வது இடத்தைப் பிடித்த தாய்லாந்தின் வாட்டனகூன் மிஸ் வாட்டர் பட்டமும், பியூர்டரிகோவின் எடி பாஸ்கஸ் மிஸ் பயர் பட்டமும் பெற்றனர்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு:

இந்திய அழகி ஒருவர் உலக அழகிப் பட்டத்தை கடைசியாக வென்றது 2000மாவது ஆண்டில்தான்.அந்த ஆண்டு லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும், தியா மிர்ஸா மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றனர். அதேபோல அதே ஆண்டில் பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றார். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போதுதான் இந்திய அழகிக்கு பட்ட வாய்ப்பு கை கூடியுள்ளது.

இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டத்தையும், அதே ஆண்டில் சுஷ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும் வென்றது முதல் இந்திய அழகிகள் உலக அளவில் பல பட்டங்களைக் குவிக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 1966ல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற ரீடா பரியாதான் இந்தியாவிலிருந்து தேர்வான முதல் மிஸ் வேர்ல்ட் அழகி ஆவார்.

முதல் மிஸ் எர்த்:

மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை இந்தியர்கள் பெருமளவில் வாங்கிக் குவித்திருந்தாலும் மிஸ் எர்த் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X