கொலம்பியா நிலச்சரிவில் 200 பேர் புதைந்தனர், 3 பேர் உயிருடன் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மெடலின்: கொலம்பியாவின் மெடலின் நகரில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்ட மக்கள் புதையுண்டு போயுள்ளனர் என்று ரெட் கிராஸ் தெரிவித்துள்ளது.
கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் புதைந்துள்ளதாக ரெட் கிராஸ் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ரெட் கிராஸ் அமைப்பின் துணை தலைவர் சீசர் தெரிவித்ததாவது,
தற்போதைய நிலவரப்படி 150 முதல் 200 பேர வரை காணாமல் போயுள்ளனர். இது வரை 3 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகள் அகற்றப்பட்டால் தான் அதில் சிக்கியிருப்பவர்களில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications