சேலம் சிறையிலிருந்து ஜான்பாண்டியன் விடுதலை: உற்சாக வரவேற்பு
நெல்லை: கோவை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பாண்டியன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 1993-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை நடந்து வரும்போது 2 பேர் இறந்து விட்டனர். ஜான்பாண்டியன் உள்பட 9 பேர் மீதான வழக்கை கோவை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. 2 பேரை விடுதலை செய்தது. ஜான் பாண்டியன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து 7 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 7 பேர் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் திர்புர்கர், திரியோத் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுதலை செய்தது. குமார், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பாண்டியன் இன்று காலை 10.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் சிறை வாசலில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட ஜான் பாண்டியன் நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை வருகிறார். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று இரவு நெல்லை வரும் ஜான் பாண்டியனுக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாம். மேலும், சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி ஜான்பாண்டியன் கிராமம், கிராமமாக சென்று கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை திரட்ட உள்ளாராம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications