திருச்சி அருகே கிராமத்திற்கு கிளிநொச்சி என பெயர் சூட்டல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே ஒரு கிராமத்திற்கு கிளிநொச்சி என பெயர் சூட்டப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
நவம்பர் 27ம் தேதி உலகம்முழுவதும் தமிழர்கள் மாவீரர் நாளை அனுசரித்தனர். அதேரபோல திருச்சி அருகே எடுமலை கிராமத்தில் உள்ள காட்டில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளம்பரிதி உள்பட சிலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அந்த காட்டுப் பகுதிக்கு கிளிநொச்சி நகர் என பெயர் சூட்டி பெயர் பலகையும் வைத்தனர்.
மொத்தமே 15 குடும்பங்கள்தான் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றன. கிளிநொச்சி என பெயர் சூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் விசாரணையில் குதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications