என்ஜினில் புகை-அவசரமாய் தரையிறங்கிய மதுரை கிங்பிஷ்ஷர் விமானம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கிங்பிஷ்ஷர் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் நேற்று மாலை 6.20 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்டது. அதில் 57 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே என்ஜின் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. உடனே விமானி மாலை 6. 45 மணிக்கு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.












Click it and Unblock the Notifications