For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்பிரமணிய சாமி பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

Subramanian Swamy
சென்னை: அதிமுக ஆதரவு வாக்காளர் பேரவை அமைப்பினர் சுப்பிரமணிய சாமியை வைத்து நடத்த இருந்த பொதுக் கூட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை போலீசார் திடீரென ரத்து செய்துள்ளனர்.

இதற்கு சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவரான சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 9ம் தேதி திருநெல்வேலியில் நான் பேசுவதாக இருந்த பொதுக் கூட்டத்திற்கு அளித்திருந்த அனுமதியை ரத்து செய்யும்படி போலீசுக்கு அறிவுறுத்தியதற்காக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த கூட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று போலீசார் கடிதம் எழுதியிருப்பதாக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த, அதிமுக பின்னணியில் இருக்கும், வாக்காளர் பேரவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது எதிர்க்கட்சிகளை அடக்குவதற்காக திமுக நிர்வாகம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் ஆகும்.

இதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கப் போகிறோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளார் சாமி.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடந்த சுப்பிரமணிய சாமியின் பொதுக் கூட்டத்தை சீ்ர்குலைக்க அதிமுக பெரும் கலவரத்தில் ஈடுபட்டது நினைவுகூறத்தக்கது. இது தொடர்பான வழக்கில் சாமி ஆஜராக நீதிமன்றம் வந்தபோது, அவருக்கு புடவையைத் தூக்கிக் காட்டி மிக ஆபாசமான, அருவெருப்பான செயலில் அதிமுக மகளிர் அணியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Janata Party chief Subramanian Swamy said police had denied permission for a public meeting, scheduled to be addressed by him on December 9 at Tirunelveli. And said, the sponsors of the meeting, the ADMK-backed Voters" Forum, informed me today that the police denied permission due to apprehension over law and order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X