வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ. 1607 கோடி ஒதுக்க கோரிக்கை

இதுபோக மழை, வெள்ளத்தால் சேதமடைந்த ஏரி, குளங்களை சீரமைக்கவும் இந்த நிதி தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இதை ஒதுக்க வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகள், வீடுகள், சேதமடைந்த பயிர்கள், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல் கட்ட நிவாரண நிதி வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 500 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியிலிருந்து சேதமடைந்த சாலைகள், ஏரிகள், குளங்களை சரி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த ஒரு மணிநேர அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் 8 மூத்த அதிகாரிகள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நடத்திய ஆய்வு முடிவுகளும் பரிசீலிக்கப்பட்டன.
தமிழக மழைக்கு 15 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீரில்மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் அறிக்கையில் தெரிக்கப்பட்டிருந்தது.
மழை நீர் முழுமையாகவடிந்த பின்னர் விரவான சேத மதிப்பீடு செய்யப்படவுள்ளது. பயிர் பாதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் ஹெக்டேருக்கு ரூ. 8000 இழப்பீடாக வழங்கப்படும். அதேசமயம், இது நெல் மற்றும் பிற பயிர்களுக்கேற்ப நிவாரணத் தொகை வேறுபடும்.
நிவாரணப் பணிகளையும் இந்த 8 அதிகாரிகள் குழு மேற்பார்வையிடும் எனஅமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போதிய நீர்ப்பாசனக் கால்வாய்கள் இல்லாததால்தான் ஆற்றுப் படுகைப் பகுதிகளில் பெருமளவில் சேதம் ஏற்படக் காரணம் என்றும் அதிகாரிகள் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்லிடம், ஹரிச்சந்திரா ஆறு, வென்னாறு, பாமினியாறு, கோரையாறு, வளவனாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் போதிய நீர்ப்பாசனக் கால்வாய்களை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்த கன மழைக்கு இதுவரை 203 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயிரிழப்பு இது. 2005ல் 186 பேர் அதிகபட்சமாக இறந்திருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.
தமிழகத்தில் மழைக்கு இதுவரை 8000 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 40,000 குடிசைகள் ஓரளவு சேதத்தை சந்தித்துள்ளன.
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 5000 நிதியும், பாதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 2500ம் இழப்பீடாக வழங்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications