ராசாவின் நண்பர், உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினரும் சோதனை!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவிடமும், ராசாவின் அண்ணன் கலியபெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணா நடத்தினர்.
சென்னை போயஸ் கார்டன் அருகே உள்ள வெள்ளாள தேனாம்பேட்டை 5வது குறுக்குத் தெருவில் சாதிக் பாட்சாவின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அதே போல பெரம்பலூர் அருகே உள்ள ராசாவின் சொந்த ஊரான சக்கரமனைவேலூரில், அவரது அண்ணன் கலியபெருமாள் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையை முடித்த பின் கலியபெருமாளை விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்தபோதே, அங்கு வருமான வரித்துறையினரும் வந்தனர். இரு துறைகளின் அதிகாரிகளும் அவரிடம் நீண்ட நேரம் விசாரித்தனர்.
இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே வருமான வரித்துறையினரின் இன்னொரு குழு சாதிக் பாட்சாவின் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்றது.
அதே போல ராசாவின் உறவினர்கள் சிலரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications