மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் உள்ளது சீமானின் விடுதலை-வைகோ
சென்னை: இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். இந்த நாளில், மனித உரிமைகளை மதிக்காத திமுக அரசு பிரயோகித்த தேசிய பாதுகாப்புச் சட்டம் செல்லாது என்று நிரூபித்துள்ளது சீமானின் விடுதலை என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க அரசு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை நசுக்க குறிப்பாக, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவுக் குரல் எழுவதை அடியோடு தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அதனால்தான் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர் மீது தொடர்ந்து ஏவியது.
ஏற்கெனவே, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி புதுவை காங்கிரஸ் அரசால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமான் மீது போட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுவித்ததை கருத்தில் கொள்ளவில்லை.
சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமானை முதலில் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் தி.மு.க. அரசு கைது செய்தது. அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போகிறார் என்று அறிந்தவுடன் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு அரசு சிறையில் அடைத்தது.
ஏற்கனவே ம.தி.மு.க.வின் கொள்கை விளக்க செயலர் நாஞ்சில் சம்பத் மீது 2009 ஆம் ஆண்டு திருப்பூரில் பேசியதற்காக சாதாரணச் சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்து கோவை சிறையில் அடைத்தது. ஜாமீன் மனுவை நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்து திருப்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை ஆணையைப் பிறப்பித்த பின்னர், நள்ளிரவில் மாவட்ட ஆட்சியரை அணுகிதேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாஞ்சில் சம்பத்தை கோவைச் சிறையில் இருந்து வெளிவர விடாமல் காவல்துறை அடைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நானே வாதாடினேன்.
நாஞ்சில் சம்பத்தைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது தவறு எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
2009 மே 2ஆம் தேதி சிங்கள அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனங்களை வழிமறித்த ம. தி.மு.க., மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறை கைது செய்து தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய புகார் மனுவின்பேரில் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி உள்துறை அமைச்சகம் அவர்களில் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வைத்தது. மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு சிறையில் அடைத்தது. அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் அரசின் நடவடிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
நேற்றைய தினம் சீமானை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.
இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். தமிழகத்தில் மனித உரிமைகளை அதிகாரக் கரங்களால் பறிக்க நினைக்கும் அரசை மக்கள் சக்தியைத் திரட்டி தூக்கி எறிய மனித உரிமை ஆர்வலர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications