நீரா ராடியா வெளிநாடுகளுக்கு உளவாளியாக செயல்பட்டிருக்கலாம்! - மத்திய அரசு

9 ஆண்டுகளில் அவருக்கு ரூ 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் எப்படி வந்தன? இதை அவர் தேச விரோத செயல்கள் மூலம் குவித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த மனுவில் அரசு தெரிவித்துள்ளது.
நீரா ராடியாவுடனான தனது பேச்சுக்கள் அம்பலத்துக்கு வந்ததால், அவற்றை மேற்கொண்டு பரவாமல் தடுக்க வேண்டும் என்றும், வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் தொழிலதிபர் ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு பதிலளித்து மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2007-ல் நீராவின் மீது சில புகார்கள் வந்ததும் அவரது பேச்சுக்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் பதிவு செய்ய ஆரம்பித்தன. சட்ட விதிகளுக்கு உட்பட்டே, தேசத்தின் நலன் கருதி இந்த பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டன.
2008-ம் ஆண்டு 120 நாட்களும் 2009-ம் ஆண்டு 60 நாட்களும் அவரது தொலைபேசி பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை எப்படி வெளியாகின என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கொண்டு கசியாமல் தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வெளியில் உலவும் பதிவுகளை ஒன்றும் செய்வதற்கில்லை...
இவற்றை வருமான வரித்துறையோ, வேறு அமைப்புகளோ வெளியிடவில்லை," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications