பாகிஸ்தானில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத முகாம்கள்: விக்கிலீக்ஸ்

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத் தளபதி தீபக் கபூர் தந்த ரகசிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி வந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி மற்றும் ராணுவத் தளபதி தீபக் கபூர் ஆகியோரை சந்தித்தபோது நடந்த உரையாடல் விவரத்தை வி்க்கிலீக்ஸ் இப்போது வெளியிட்டுள்ளது.
ஜேம்சிடம் தீபக் கபூர் கூறுகையில், பாகிஸ்தானில் 43 தீவிரவாத முகாம்கள் உள்ளன. இதில் 22 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளன.
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலையடுத்து சில முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது. ஆனால், அவற்றில் பல முகாம்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.
இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை எங்கள் ராணுவத்தினரால் பிடிக்க முடியும்போது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏன் அவர்களை தடுக்கவோ, பிடிக்கவோ முடியவில்லை என்பதை அமெரிக்கா யோசி்த்துப் பார்க்க வேண்டும் என்று கபூர் கூறியதாக டெல்லியி்ல் உள்ள அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ரகசிய தகவலை அனுப்பியுள்ளது. இந்த உரையாடல் விவரம் தான் இப்போது வெளியாகியுள்ளது.
தவறான செய்தி-மன்னிப்பு கேட்ட பாக். பத்திரிக்கைகள்:
இந் நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இயங்கும் தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆயுதமும் நிதியுதவிம் அளிப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்து்ளதாக பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், உண்மையில் விக்கிலீக்ஸ் இப்படிப்பட்ட செய்தி எதையும் வெளியிடவே இல்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த யாரோ விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை ஹேக் செய்து அதன் டேட்டாவை திருத்தி, இந்தியா குறித்து விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது போல விஷமச் செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்தியா குறித்து தவறாக செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்டுள்ளன. அந்த நாளிதழ்களின் முதல் பக்கத்திலேயே மன்னிப்புச் செய்தி வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications