ஆயதப்படைக்கு மாற்றப்பட்ட 22 போலீசாருக்கு மீண்டும் ஸ்டேஷன் பணி: டிஐஜி உத்தரவு
நெல்லை: சிறு சிறு தவறுகளுக்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 22 போலீசாரை மீண்டும் ஸ்டேஷன் பணிக்கு மாற்ற நெல்லை டிஐஜி சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்ட போலீசுக்கு சொந்தமான வாகனங்கள், ஆயுதங்களை நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் டிஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் போலீசாரின் குறைகளைக் கேட்டார்.
போலீசார் தனித்தனியே டிஐஜியை சந்தித்து தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். காலதாமதமாக பணிக்கு வருதல், பணியில் கவனக்குறைவு உள்ளிட்ட சிறு தவறுகளுக்காக மாவட்டம் முழுவதும் 26 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இடமாற்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் ஸ்டேஷன் பணி வழங்க வலியுறுத்தி டிஐஜியிடம் ஏற்கனவே மனு அளித்தனர். இவர்கள் நேற்று டிஐஜியிடம் மீண்டும் ஸ்டேஷன் பணி வழங்க வலியுறுத்தினர்.
பின்னர் டிஐஜி சண்முகராஜேஸ்வரன் கூறும்போது,
சிறு தவறுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட 26 பேரிடம் விசாரணை நடத்தினேன். அவர்கள் செய்த தவறு, குடும்ப சூழ்நிலை, பழைய நடத்தைகள், ஏற்கனவே தண்டனை பெற்றவரா என விசாரித்தேன்.
சிறு தவறுகள் செய்ததற்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 22 பேருக்கு மீண்டும் ஸ்டேஷன் பணி வழங்கப்படும். மீதமுள்ள 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications