உ.பி.யில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் நசீராபாத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர்.
நசீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஷாபாத் ஷர்மா. அவர் பிளாஸ்டிக் ஷீட் போட்ட ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி காலையில் டீ போட்டுக் கொண்டிருக்கையில் சிலிண்டர் திடீர் என்று வெடித்தது. இதையடுத்து வீடு தீப்பிடித்து எறிந்தது. இதில் வீட்டில் இருந்த 6 பேர் உடல் கருகி இறந்ததாக டிஐஜி அஷோக் முத்தா ஜெயின் தெரிவித்தார்.
ஷர்மாவின் மனைவி, 23, 25 வயதான 2 மகள்கள், மகன் (22) மற்றும் 7, 8 வயதான 2 பேரக்குழந்தைகள் இந்த விபத்தில் இறந்தவர்கள் ஆவர்.
விபத்து நடந்தபோது ஷர்மாவும், அவரது இன்னொரு மகளும் வீட்டில் இல்லை. ஷர்மாவின் வீடு தீப்பிடித்து எரிவதைப் பார்த்து தீயை அணைக்க வந்த பக்கத்து வீட்டுக்காரரான கோபாலுக்கு தீக்காயம் ஏற்பட்டது என்று டிஐஜி தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications