மலேசியா-சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 22 பேர் பலி
கோலாலம்பூர்: மலேசியாவில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 22 பேர் உயிரிழந்தனர்.
கேமரூன் ஹைலேண்ட்ஸ் என்ற இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. விபத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சுவதாக தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமினுதீன் அப்துல் ரஹீம் தெரிவித்தார். விபத்து நடந்த இடம் மத்திய மலேசியாவில், பெரக் மாகாணத்தில் உள்ளது.
விபத்தில் சிக்கிய 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. பலி எண்ணிக்கை இன்னும் இறுதியாகவில்லை.
இருப்பினும் விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என விபத்து நடந்த பகுதி வரும் பெரக் மாகாண காவல்துறை தலைவர் ஜகாரியா யூசப் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் பயணித்ததாக தெரிகிறது. எனவே இறந்த அனைவரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications