சமையல் கேஸ், டீசல் விலை உயர்வை 'கண்ணீரால் காத்த' வெங்காயம்!

வெங்காய விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் சமையல் கேஸ் விலையையும் டீசல் விலையையும் உயர்த்தினால் கதர்ச் சட்டை காங்கிரசார் ரோட்டில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் மத்திய அரசு இந்த விலை உயர்வை ஒத்தி வைத்துள்ளது.
டீசல், கேஸ் விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கும் மூத்த அமைச்சர்கள் குழுக் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தக் கூட்டம் மாத இறுதிக்கு தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.
இக் குழுவில் இடம் பெற்றுள்ள சில அமைச்சர்கள் டெல்லியில் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டியுள்ளது. உண்மையான காரணம், வெங்காய விலை தான் என்று கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாயும் உயர்த்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
ஆனால் கடந்த ஜூன் மாதத்தில்தான் சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டது. எனவே சமையல் கேஸ் விலையை மேலும் ரூ. 50 மட்டும் உயர்த்த அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என்று தெரிகிறது.
இந் நிலையில் வெங்காய விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துள்ளது. இதன் விலை ஓரளவுக்கு நன்றாகவே குறைந்தவுடன் கேஸ், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications