For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 பிருத்வி ஏவுகணைகள்: அடுத்தடுத்து வெற்றிகரமாக சோதனை

By Chakra
Google Oneindia Tamil News

Prithvi Missile
பலாசூர்: தரையிலிருந்து அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி-2 ரக ஏவுகணைகளை இந்தியா இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.

சுமார் 350 கி.மீ வரை சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணைகள் ஒரிஸ்ஸாவின் வீலர் தீவில் உள்ள சண்டிபூர் ஏவுதளத்தில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்டன.

ஒரு மணி நேர இடைவெளியில் இன்று காலை அடுத்தடுத்து இரு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடந்ததாக ஏவுதள மையத்தின் இயக்குநர் எஸ்.பி.தேஷ் தெரிவித்தார்.

பிருத்வி ஏவுகணைகள் ராணுவத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்டு வரும் ஏவுகணைகளில் இருந்து இரு ஏவுகணைகள் எடு்த்து வரப்பட்டு இன்று சோதனையிடப்பட்டன. இவை வழக்கமான சோதனைதான் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Two nuclear-capable medium range Prithvi-II surface-to-surface missiles were successfully flight-tested within an hour of each other from the Integrated Test Range (ITR) at Chandipur-on-sea on the Orissa Coast today. All the radars, electro-optical tracking systems and telemetry stations along the coast had monitored all the trajectory parameters of the vehicle throughout the mission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X