ராகுலை 'வரவேற்ற' கறுப்பு துணி புறாக்கள்-கறுப்பு பலூன்கள்!
காவித் தீவிரவாதம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நடந்தது.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கறுப்பு பலூனை பறக்கவிட்டவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முன்னதாக மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை சென்ற ராகுல் அங்கிருந்து திருப்பூர் செல்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். அங்கு சிவசேனா, இந்து மக்கள் கட்சியினர் அவருககு எதிராக போராட்டம் நடத்தின.
அங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சிவசேனாவைச் சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே போல நேற்று மதுரை வந்த ராகுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புறாக்களின் கால்களில் கறுப்புத் துணியை கட்டி பறக்க விட்டனர் இந்து இளைஞர் பேரவையினர்.
இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications