For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பைக்குள் ஊடுறுவிய 4 தீவிரவாதிகள்-தொடர்ந்து தேடுதல் வேட்டை-உஷார் நிலை நீடிப்பு

Google Oneindia Tamil News

Mumbai Taj Mahal palace hotel
மும்பை: மும்பை நகருக்குள் ஊடுறுவியுள்ள நான்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இதுவரை சிக்கவில்லை. அவர்களைப் பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனால் நகரம் தொடர்ந்து உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை நகருக்குள் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாக மத்திய உளவுத்துறை சமீபத்தில் தகவல் வெளியிட்டது. அந்த நான்கு பேரின் புகைப்படங்கள், பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டன.

இதையடுத்து மும்பை முழுவதும் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டது. நான்கு பேரையும் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் இதுவரை தீவிரவாதிகள் சிக்கவில்லை.

இதையடுத்து நகரம் உச்சகட்ட உஷார் நிலையில் தொடர்ந்து இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க விடுதிகள், ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை, கண்காணிப்பு, தேடுதல் நடந்து வருகிறது.

அனைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முன்பும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். என்எஸ்ஜி கமாண்டோப் படையினரும், மும்பையின் அதி விரைவு கமாண்டோப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் குறித்த தகவல் தெரிந்தோர் 022-22633333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Mumbai city continues to remain on high alert after four Lashkar-e-Taiba militants entered the city a few days ago. A manhunt is underway in Mumbai. Police say all possible hideouts, small lodges, guesthouses and railway stations are being checked. Police have been posted outside five-star hotels. Vehicles entering the city are also being searched. Citizens can call 022-22633333 to report any suspicious persons or incidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X