மண் அள்ள தடை-வறுமையில் வாடும் மண்பாண்ட தொழிலாளர்கள்

பணகுடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தீபவிளக்குள், பானைகள், பூந்தொட்டிகள், அலங்கார பொம்மைகள், என அனைத்தையும் வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்களாக திகழ்ந்தனர்.
இவர்களது ஜீவனம் நன்றாக இருந்தது. காலம் போக்கில் பளபளப்பான பாத்திரங்களின் வருகையால் இவர்களது வாழ்க்கை இறங்கு முகம் காணத்துவங்கியது. தற்போது இதன் பொருட்கள் ஓரங்கப்பட்டுள்ளன. முழுமையாக ஓதுக்க முடியாவிட்டாலும் இன்றும் நெல்லை பகுதியில் சில ஓட்டல்களில் மண்பானையில் சமைக்கப்பட்ட சோறு பறிமாறப்படுகிறது.
குளங்களில் மணல் அள்ள தடை, அதிகாரிகள் கெடுபிடியால் தொழிலாளர்கள் சிரத்திற்கு ஆளாகின்றனர். இதுபோல் சூளைகளும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து பணகுடியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி குமார் கூறுகையில், மண்பானைகளை ஆர்டம் அதிகம் கிடைத்தாலும் எங்களால் அதை உற்பத்தி செய்ய முடியவில்லை. பல பொருட்கள் செய்ய திறமை இருந்தும் பானை மட்டுமே தயார் செய்கிறோம்.
ஏனென்றால் உரிய சூளை வசதி இங்கு இல்லை. லாரி லாரியாக மணல் கடத்துபவர்களை கண்டு கொள்ளாத அதிகாரிகள் தொழிலுக்காக மண் எடுப்பதை மட்டும் தடுக்கின்றனர். இதனால் மிகவும் கஷ்டமாக உள்ளது. அரசுதான் உதவ முன்வரவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications