கிருஷ்ணகிரி: லாரி-வேன் மோதலில் பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே இன்று அதிகாலை வேனும் லாரியும் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.
போத்தாபுரம் அருகே பைபாஸ் சாலை மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்தது.
கிரானைட் கல் ஏற்றிச் சென்ற லாரி மீது பெங்களூரில் இருந்து வந்த சுற்றுலா வேன் மோதியதில் வேன் டிரைவர் பிரகாஷ் (45), ஜெயராம ரெட்டி (46), அவரது மகன் பிரித்திவி ரெட்டி (17), அருண் (23), பாக்யா (40), சர்மிளா (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ஜெயராம ரெட்டியின் மனைவி காயத்திரி, மகன் கிஷோர், சுதா, அலெக்ஸ், வினய் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் காயத்திரி, சுதா ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேகமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாற்று ப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பலியான அருண், பாக்யா, சர்மிளா ஆகியோர் ஜெயராம ரெட்டியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஆவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications