ரோம் நகர கிரேக்க தூதரகத்துக்கும் வெடிகுண்டு பார்சல்!
ரோம்: சுவிட்சர்லாந்து, சிலி தூதரகங்களைத் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள கிரேக்க தூதரகத்துக்கும் வெடிகுண்டு பார்சல் வந்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடந்த 23ம் தேதி பார்சல் குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். அதே போல சிலி நாட்டுத் தூதரகத்துக்கும் பார்சல் குண்டு வந்தது.
இந் நிலையில் நேற்று ரோம் நகரில் உள்ள கிரேக்க நாட்டு தூதரகத்துக்கும் பார்சல் வெடிகுண்டு அனுப்பப்பட்டது. அலுவலகத்துக்கு வந்த தபால்களை ஊழியர்கள் பிரித்து கொண்டிருந்தபோது ஒரு பார்சலில் சிடி பிளேயர் இருந்தது. அதனுடன் வெடிகுண்டு இணைக்கப்பட்டிருந்தது.
அந்த பார்சலை பிரித்தபோது குண்டு வெடிக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
இந்த சம்பவத்தையடுத்து தூதரகத்தை விட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டு பார்சலை அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் அதை வெடிக்கச் செய்தனர்.
இந்த பார்சல் கடந்த வெள்ளிக்கிழமையே கிரேக்க தூதரக அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. அன்று கிருஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் யாரும் அதை பிரிக்கவில்லை.
இந்த சம்பவத்தையடுத்து ரோம் நகரில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களிலும் பார்சல்சளை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு பார்சல்களை நாங்கள் தான் அனுப்பினோம் என்று Anarchist Federation (FAI) என்ற அடையாளம் தெரியாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications