திண்டிவனத்தில் ஹோட்டல் ஊழியரைத் தாக்கி, ஹோட்டலை சூறையாடி ரூ. 1 லட்சம் பணத்தை திருடிய ரவுடிகள்
திண்டிவனம்: திண்டிவனத்தில் ரவுடிக் கும்பல் ஒன்று ஹோட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டி, ஹோட்டலை சூறையாடி அங்கிருந்த ரூ. 1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியது.
திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் நிர்வாகத்தினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ரவுடிகள் மாமுல் கேட்பதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் ரவுடிகள் கடும் கோபமடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு அந்த ஹோட்டலுக்கு 10க்கும் மேற்பட்டோர் கொண்ட ரவுடிக் கும்பல் புகுந்து ஹோட்டலை அடித்து நொறுக்கி சூறையாடியது. அங்கிருந்த ஊழியரையும் தாக்கியது. கேஷியரைத் தாக்கிய அவர்கள் கல்லாவில் இருந்த ரூ. 1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இந்த அதிரடி சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடிகள் ஆடிய வெறியாட்டத்தைப் பார்த்து பொதுமக்கள் திகைத்து போய் நின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications