For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அடாவடி கோஷ்டிகானம் பாடுவது ஏன்?-கி.வீரமணி

Google Oneindia Tamil News

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணைதான் வேண்டும் என்று ஏன் எதிர்க்கட்சிகள் அடாவடியாக கோஷ்டி கானம் பாடுகின்றன என்று கேட்டுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத்தை 23 நாட்கள் முடக்கி, மக்கள் பணத்தை 146 கோடி ரூபாயை விரயமாககிய பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என வீண் பிடிவாதம் பிடிக்கின்றனர்.

பாஜக மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொது கணக்குக் குழு மற்றும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் இடம்பெற்றுள்ள ஒரு நபர் விசாரணைக் கமிஷன் ஆகியவை 2ஜி அலைக்கற்றை பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் அடாவடியாய் கோஷ்டிகானம் பாடுவது ஏன்?

இதற்கு முன் 4 முறை நடைபெற்றுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையின் பலன் என்ன? அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் எழுப்பும் இந்தக் கோரிக்கையை நம்புவதற்கு மக்கள் ஏமாளிகள் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DK leader K.Veeramani has slammed Opposition parties in 2G spectrum issue. He has said in a statement that earlier so many JPCs were formed to investigate scandals. But nothing good happened, by knowing this the opposition parties still insist for JPC to be formed in 2G issue. This is clearly politically motivated, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X