கிரீடம் செய்ய வசூலித்த நன்கொடையில் மோசடி-காளஹஸ்தி கோவில் நிர்வாக அதிகாரிக்கு பிடிவாரண்ட்
காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் உள்ள ஞானபிரசுனாம்பிகா தாயாருக்கு வைர கிரீடம் செய்ய பணம் வசூலித்ததில் மோசடி செய்த கோவில் நிர்வாக அதிகாரிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
காலஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன்கோவில் உள்ளது. இங்குள்ள ஞானபிரசுனாம்பிகா தாயாருக்கு வைர கிரீடம் செய்ய பக்தர்களிடம் இருந்து ரூ. 29 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு வைர கிரீடம் செய்யப்பட்டது.
இதற்கிடையே பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்திற்கு ரசீது கொடுக்காமல் கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மோசடி செய்ததாக புகார் வந்தது.
இநத மோசடி குறித்து சுதர்சன ரெட்டி என்பவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நான் ஞானபிரசுனாம்பிகா தாயாருக்கு வைர கிரீடம் செய்ய நன்கொடை அளித்தேன். ஆனால் அதற்கான ரசீது எனக்கு வழங்கப்படவில்லை. என்னைப் போன்று பலருக்கும் ரசீது வழங்காமல் மோசடி நடந்துள்ளது என்று அதில் கூறியிருந்தது.
மேலும், சுதர்சனரெட்டி தான் நன்கொடை கொடுத்ததற்கான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். அவர் ஆஜராகததையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications