ராடியாவின் தமிழகத் தொடர்புகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்-செ.கு.தமிழரசன்
வேலூர்: நீரா ராடியாவுக்கும், மதிழகத்தில் உள்ள சிலருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ. ராசாவைக் காப்பாற்ற கருணாநிதி முயற்சிக்கிறார். இது ராசா தலித் என்பதற்காக அல்ல. தலித் மீது அவருக்கு அக்கறை இருக்குமானால் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 220 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் கூட கிடைக்கவில்லையா? பணம் சம்பாதித்துக் கொடுப்பவர்தான் அவருக்கு தலித்தா?
முதல்வர் குடும்பத்துடன் நீரா ராடியாவுக்குத் தொடர்பு இருப்பது அவரது தொலைபேசி உரையாடல் மூலம் தெளிவாகியுள்ளது. அதனால் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முழு உண்மையும் வெளிப்படும்.
திமுகவின் கவர்ச்சி திட்டங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இத்திட்டங்கள் மூலம் மக்கள் பயனடையவில்லை. ஆளும் கட்சிக்காரர்களும், இடைத்தரகர்களுமே பயனடைந்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் இன்றைக்கு சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே செயல்பட முடியும் என்ற அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு பாழாறாகி விட்டது. பாலாற்றில் மணல் எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிடில், ராமநாதபுரத்தைப் போன்று வறண்ட பூமியாக வேலூர் மாவட்டம் மாறும்.
அதிமுக கூட்டணி இன்றைக்கு மக்கள் கூட்டணி மட்டுமல்ல; வலுவான கூட்டணி. ஊழல் பிடியில் இருந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் அதிமுகதான் ஆட்சிக்கு வர வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களும் முடிவெடுத்து விட்டனர் என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications