ஜன. 12ல் சென்னை சங்கமம் கலை விழா தொடக்கம்-கனிமொழி
சென்னை: சமீபத்திய சிபிஐ சோதனைகளால் சற்றும் மனம் தளராத தமிழ் மையம் அமைப்பு, தமிழக அரசின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆண்டு தோறும் நடத்தி வரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்குத் தயாராகி விட்டது.
ஜனவரி 12ம் தேதி முதல்வர் கருணாநிதி இந்த 6 நாள் கலை விழாவை தீவுத் திடலில் தொடங்கி வைக்கிறார். இதை முதல்வரின் மகளும், திமுக எம்.பியும், தமிழ் மையத்துடன் இணைந்து சென்னை சங்கமத்தை நடத்தி வருபவருமான கனிமொழி செய்தியாளர்களிடம் தேரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 5வது சென்னை சங்கமம் கலை மற்றும் கிராமியக் கலைகள் விழா ஜனவரி 12ம் தேதி தொடங்கும். 17ம் தேதி வரை இது நடைபெறும்.
12ம் தேதி தீவுத் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி விழாவைத் தொடங்கி வைப்பார்.
நாட்டின் மிகப் பெரிய வெளிப்புற கலை விழா என்ற பெருமையை சென்னை சங்கமம் பெற்றுள்ளது.
சமீபத்திய சிபிஐ சோதனைகளால் தமிழ் மையத்திற்கு எந்த அகவுரமும் ஏற்படவில்லை. இந்தக் கலை விழா மிகப் பிரமாண்டமானதாக அமையும்.
இந்த கலை நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கக் கோரி (ஸ்பான்சர்) 2000 பேருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் கலை நிகழ்ச்சியை மட்டுமே நடத்துகிறோம். இதில் பங்கேற்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு ஊதியத்தை வழங்குகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை சங்கமம் நிகழ்ச்சி சென்னை மக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது பெரும் மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் அளித்தது. அதேபோல இந்த ஆண்டும் சிறப்பான முறையில் விழா நடைபெறும்.
நாட்டுப்புற கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் அதே நேரத்தில் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விழாவின் நிறைவு நிகழ்ச்சி ஜனவரி 17ம் தேதி பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரையில் நடைபெறும் என்றார்.
பேட்டியின்போது உடன் இருந்த ஜெகத் கஸ்பார் ராஜ் கூறுகையில், இதே போன்ற விழாக்களை ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் நடத்த தமிழ் மையம் திட்டமிட்டு வருகிறது. கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது இதை நடத்தினோம். அதேபோல தங்களது பகுதிகளில் நடத்த யாரேனும் விரும்பி முன்வந்தால் அதை பரிசீலிப்போம்.
இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ரூ. 4 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications