திமுகவுடன் உறவு சிறப்பாகவே உள்ளது-பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு

பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் வரவேற்க முதல்வர் கருணாநிதி செல்லவில்லை. அதேபோல இரவு ஆளுநர் மாளிகைக்கு சென்று பிரதமரை பார்க்கவிருந்த திட்டமும் கைவிடப்பட்டது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் கருணாநிதி. 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமரிடம், திமுக, காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எப்போதும் போல வலுவாகவும், சிறப்பாகவும் உள்ளது என்று பதிலளித்தார் பிரதமர்.
முதல்வர் கருணாநிதியுடன் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தமிழக வெள்ள நிலைமை குறித்து முதல்வர் என்னிடம் விவரித்தார். அதேபோல அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவுக்கான அனுமதி தொடர்பாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுடனான உறவுகள் குறித்தும் பேசினோம் என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications