காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களைக் கொன்றது தீவிரவாதிகளே-ஹூரியத் தலைவர் அப்துல் கனி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் சிலரைக் கொன்றது ராணுவம் அல்ல, மாறாக தீவிரிவாதிகளே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார் முக்கிய பிரிவினைவாத தலைவரும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவருமான அப்துல் கனி பட்.
அப்துல் கனி லோனே, மீர்வைஸ் மெளலவி பரூக் ஆகிய முக்கிய பிரிவினைவாத தலைவர்களைக் கொன்றது தீவிரவாதிகள்தான், ராணுவம் அல்ல என்று பட் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் மூத்த தலைவர் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பட் கூறுகையில், ஒருவரைக் கொல்வது என்பது மிகவும் கொடுமையானது. ஒரு கொலைக்கு எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாது. அதிலும் அப்பாவிகளைக் கொல்வது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அப்துல் ஹத்வானி, மெளலானா முகம்மது பரூக், அப்துல் கனி லோனே ஆகியோர் ராணுவத்தால் கொல்லப்படவில்லை, நமது மக்களே அவர்களைக் கொன்றுள்ளனர். இது எனக்குத் தெரியும்.
காஷ்மீரில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவம் பரிசுத்தமானது என்று நான் கூற மாட்டேன். அவர்கள் மக்களைக் கொன்று வருகின்றனர். ஆனால் நமது மக்களே, நம்மில் சிலரைக் கொல்வது ஏற்க முடியாது. அதைத்தான் நான் கூற வருகிறேன். உண்மையைச் சொல்வதற்காக நான் கூட கொல்லப்படக் கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நான் அஞ்சவில்லை.
எனது சகோதரரையும் கூட எமது மக்களில் சிலரேக் கொன்றனர். இதுதான் உண்மை. இதைச் சொல்ல நான் பயப்படவில்லை. இதற்காக என்னைக் கொன்றால் அதையும் நான் வரவேற்பேன் என்றார் அவர்.
மீர்வைஸ் பரூக் 1991ம் ஆண்டும், லோனே 2002ம் ஆண்டிலும் கொல்லப்பட்டனர். இருவரும் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கடுமையாக முயன்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications