6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் உறவினருக்கு ஜாமீன்
சென்னை: சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் சுரேஷ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சேலத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் 5 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம்தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குப்புராஜின் மகன் சிவகுரு சென்னையில் கோர்ட்டில் சரணடைந்தார்.
அதன் பின்னர் சிபிசிஐடி போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினரான சுரேஷ் குமார் சிக்கினார். அவரை போலீஸார் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கைது செய்தனர். கொலைக்கு இவர் தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ் குமார் ஜாமீன் கோரி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார். அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன்,
இந்த வழக்கில் சுரேஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகளைத் தவிர, அவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும், அவர் கடந்த 20.10.2010 முதல் சிறையில் இருந்து வருகிறார். இவற்றைக் கருத்தில்கொண்டு, அவரை நிபந்தனை ஜாமீனில் வெளியே விட இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.
சுரேஷ் குமார், சேலம் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ. 10 ஆயிரத்துக்கு பிணையப் பத்திரம் தர வேண்டும். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை அவர் திருச்சியில் தங்கியிருந்து முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் நிபந்தனை விதித்து ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications