மக்களுக்கு வழங்கும் பொங்கல் பையில் திமுக சின்னம் எதற்கு?-சீமான் கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச பொங்கல் பை வழங்கப்படுகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பைகளில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளனர்.
அந்தப் பொருட்களை தமிழக அரசு தான் வழங்குகிறது. ஆனால் அதில் உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளனர். அரசு சார்பில் அரசின் நிதியில் வழங்கப்படும் பொருட்களில் திருவள்ளுவர் படம் இருந்தால் போதுமானது, கருணாநிதியின் கட்சி சின்னம் எதற்கு?
இதன் மூலம் வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க தமிழ் மக்களை நிர்ப்பந்தப்படுத்துவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது.
பொங்கல் பையில் உதயசூரியன் சின்னம் மட்டுமல்ல, முன் எப்பொழுதும் இல்லாத வகையில் கருணாநிதியின் ஆட்சியில் அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகின்றது. அவரது புகைப்படம் இடம் பெறுகிறது.
பேருந்தில் இருந்து, ரேஷன் கடையில் விற்கப்படும் மளிகைப் பொருட்கள் வரை அனைத்திலும் கருணாநிதி பெயரும் புகைப்படமும் தான். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications