ஜெயலலிதாவின் அறிக்கை 'பொய்க்குளியின் புளுகு மூட்டை': கே.என்.நேரு
சென்னை: டீசல் இல்லாமல் அரசுப் பேருந்துகள் ஓடாமல் நிற்பதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை, 'பொய்க்குளியின் புளுகு மூட்டை' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறக்கையில், போக்குவரத்து துறையிலே டீசலுக்கு பணம் இல்லை என்றும், அரசுப் பேருந்துகள் ஓடாமல் நிற்பதாகவும் கற்பனையை வார்த்தையாக்கி ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
இது முற்றிலும் தவறான தகவல். அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வழக்கமான நடைமுறைப்படி 2 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது. டீசல் இல்லாமல் பேருந்துகள் ஓடாமல் நிற்கின்றன என்ற ஜெயலலிதாவின் அறிக்கை எப்போதும்போல் பொய்க்குளியின் புளுகு மூட்டை.
ஜெயலலிதா ஆட்சியில் 16,392 பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 20,733 பேருந்துகள் அன்றாடம் இயக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் ஜெயலலிதாவுக்கு அறிக்கைவிட என்ன யோக்கியதை இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை எப்படி செயல்பட்டது, தற்போது எப்படி செயல்படுகிறது என்பதற்கு அண்மையில் நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியும், அதிமுக 3வது இடத்திற்கு போனதையும் ஜெயலலிதா மறந்து விட்டாரா?.
ஜெயலலிதாவின் அறிக்கைக்கு முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேள்வி எழுப்பி வாரக்கணக்கில் ஆகியும் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதாவுக்கு அறிக்கை ஒரு கேடா?.
இவ்வாறு நேரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications