ஒபாமாவின் செய்தித்தொடர்பாளர் கிப்ஸ் ராஜினாமா: அரசியல் ஆலோசகராகிறார்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பிரதான செய்தித்தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தனது பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
கிப்ஸ் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளராக இருந்து வருகிறார். ஒபாமாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களில் ஒருவர். இந்த நிலையில் அப்பொறுப்பிலிருந்து விலகுகிறார் கிப்ஸ். அதற்குப் பதில் அடுத்த மாதம் முதல் அவர் ஒபாமாவின் அரசியல் ஆலோசகராக பணியாற்றுவார்.
2012-ம் ஆண்டும் வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமாவுக்கு துணையாக இருக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அதிபர் ஒபாமா நேற்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,
கிப்ஸ் எனக்கு ஆலோசகராக நீடிப்பார். அவர் இனி வரும் காலங்களில் எனக்கு அரசியல் அறிக்கைகள் தயாரித்து தருவார். அவர் எளிய சம்பளத்தில் ஓய்வின்றி வேலை பார்த்தார் என்றார்.
கிப்ஸின் பதவிக்கு யார் வருவார் என்பது குறித்து இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒபாமா மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை நிர்வாக ஊழியர்களை மாற்றியமைத்துள்ளதையடுத்து கிப்ஸ் ராஜினாமா செய்கிறார். வரும் அதிபர் தேர்தலில் ஒபாமா அதிக பலம் வாய்ந்த குடியரசுக் கட்சி வேட்பாளரை சந்திக்கவிருக்கிறார்.
39 வயதாகும் கிப்ஸ் வடக்கு காரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒபாமாவிடம் பணியாற்றுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications