நெல்லை திமுக கவுன்சிலரை தாக்க முயற்சி: மமமுகவினர் 10 பேர் கைது
நெல்லை: நெல்லை மாநகராட்சி கவுன்சிலரை தாக்க முயன்ற மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கட்சியினர் தச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர்.
நெல்லை பேட்டையில் கழிவு நீரோடை சுத்தம் செய்வது தொடர்பாக நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் அப்துல் வகாப்பிற்கும், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் சில நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கவுன்சிலர் பேட்டையில் உள்ள ஒரு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றபோது மமமுகவினர் அவரை தாக்க முயன்றதாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மமமுகவை சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.
அவர்களை விசாரணைக்காக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதை அறிந்த மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் பாளை ரபீக், மாவட்ட துணை தலைவர் மைதீன் தலைமையி்ல் ஏராளமானோர் தச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த உதவி கமிஷனர் லயோலா இக்னோஷியஸ், இன்ஸ்பெக்டர் பற்குணம், பார்னாஸ் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மமமுகவினர் கலைந்து சென்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications