தேர்தல் கூட்டணி பிப்ரவரியில் அறிவிப்பு: தா. பாண்டியன் தகவல்
விருதுநகர்: சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என்று இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவி்த்தார்.
இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது,
நெல்லை மாவட்டம் பாபநாசத்தி்ல் இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பொது குழு கூட்டம் வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பரதன், துணை செயலாளர் சுதாகர் ரெட்டி, கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலை மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படு்ம். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழக அரசு வாங்கிய மொத்த கடன் தொகை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். ரூ. 91 ஆயிரம் கோடி பொது கடனாக உள்ளது. ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி சேவை கட்டணம் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டியது வரும்.
மழையால் அனைத்து மாவட்டங்களிலும் மானாவாரி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கி்ட்டு நிவாரணம் வழங்க வேண்டும். மதசார்பற்ற ஐனநாயக கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேமுதிகவினர் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எந்த, எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை பிப்ரவரியில் அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications