அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மதுரை: அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் மருத்துவ அலுவலர்கள் பணியிடங்கள் நேர்காணல் மற்றும் கலந்தாலோசனை செய்து உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
இது வரை முப்பத்தி நான்கு கலந்தாய்வுகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் மூலம் 6978 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தின் மலைப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை சிறப்பு நியமனம் மூலம் நிரப்பிட அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி மேற்படி பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, எண்.359, அண்ணாசாலை, டி.எம்.எஸ். வளாகம், தேனாம் பேட்டை, சென்னை- 600 006.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 10.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications