வரும் சட்டமன்ற தேர்தல் குருசேத்திர போர்-ஆனந்தராஜ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: வரும் சட்டமன்ற தேர்தல் குருசேத்திர போர் ஆகும். இதில் தொண்டர்கள் கவனமாக செயல்பட்டு அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவில் 100 கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் அதிமுகவின் உண்மையான கூட்டணி மக்களோடு தான்.

திமுக எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என நினைக்கிறது. ஆனால் வரும் தேர்தலில் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும்.

விஜயகாந்த் கட்சியினர், எம்.ஜி.ஆரின் படத்தை போடுவது தவறு. அது நல்ல பண்பல்ல, எம்.ஜி.ஆர். எங்கள் தந்தை. அவரை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?.

அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வரப்போகிறது. இன்னும் பல கட்சிகளும் இடம் பெறவுள்ளன. அதிமுகவுக்கு லட்சம் முக்கியம் அல்ல, லட்சியங்கள் தான் முக்கியம்

பிளஸ்-2 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சி்த் தலைவி தான். வரும் சட்டமன்ற தேர்தல் குருசேத்திர போர் ஆகும். இதில் தொண்டர்கள் கவனமாக செயல்பட்டு அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+