முல்லைப் பெரியாறு அணை: தொழில்நுட்பக் குழுவில் முதல்கட்ட ஆய்வு முடிந்தது
குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில்நுட்பக் குழுவினரின் 3 நாள் ஆய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த குழு தனது ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றம் நியமித்த ஐவர் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு கடந்த மாதம் 21ம் தேதி அணையை ஆய்வு செய்ததது. அப்போது அணையின் பலத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்ய வேண்டும என்று கேரள அரசு கோரியது. இதையடுத்து மத்திய தொழில்நுட்ப குழுவினர் கடந்த 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய மண் வள ஆராய்ச்சி மைய இணை இயக்குனர் ராஜ்பால் சிங் தலைமையிலான இக் குழுவில் 5 பேர் இடம் பெற்றிருந்தனர்.
முதல் நாள் மெயின் அணை, பேபி அணை, நீர்க் கசிவு காலரி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இரண்டாவது நாளும் நேற்றும் நீர் மூழ்கி வீரர்கள் அணையின் நீர்த் தேக்கப் பகுதியில், நீரில் மூழ்கியுள்ள அணையின் சுவரைப் நீர்மூழ்கி கேமராக்கள் மூலம் படம் எடுத்தனர்.
பின்னர் அணையின் சுவர் கட்ட பயன்படுத்தப்பட்ட மண்ணின் தரத்தை அறிய தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரளம் கோரியது. இதையடுத்து இக் குழுவினர் லோயர் கேம்ப் பகுதிக்கு வந்தனர்.
115 ஆண்டுகளுக்கு முன் இந்த அணை கட்ட இப் பகுதியில் இருந்து தான் சுண்ணாம்புக் கல் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது இப் பகுதியி்ல் சுண்ணாம்பு காளவாசல்கள் ஏதும் இல்லாததால் குழுவினர் திரும்பிச் சென்றனர்.
இந்த குழுவினர் இன்று டெல்லி திரும்பி உச்ச நீதிமன்றம் நியமித்த ஐவர் குழுவிடம் தங்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர்.
இந் நிலையில் அணையின் மேல் பகுதியில் 5 இடங்களில் சிறிய துளையிட்டு சுவரின் மண் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரளம் புதிய கோரிக்கையை வைத்துள்ளது. இந்த ஆய்வு அடுத்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உயர்மட்ட குழுவின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 17 மற்றும் 18ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள அரசின் உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications