தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டி, 10 தொகுதிகளில் வெல்லும்-இல.கணேசன்

இது குறித்து மதுரையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணி வழிகாட்டியாக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்காக பல்வேறு போராட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அதற்காகத் தான் தாமரை ரத யாத்திரையை தொடங்கியுள்ளோம்.
தி.மு.க -அ.தி.மு.க -வால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில் காங்கிரசின் செல்வாக்கு குறைந்துள்ளது. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க-வின் வளர்ச்சி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. அதேபோன்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications