ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் பெரும் வெற்றி பெறும்-ரோஜா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திராவில் சட்டசபைத் தேர்தல் நடந்தால் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் டெபாசிட் இழக்கும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

எந்தக் கட்சியிலும் சேர முடியாமல் தவித்து வந்த ரோஜா தற்போது ஜெகன்மோகன் தரப்புடன் இணைந்து கொண்டுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி புதிய கட்சி தொடங்கியதும் அவருக்கு மகளிர் அணித் தலைவி பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிதான். ஆந்திர மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இதனால்தான் ஆந்திரா வில் ராகுல்காந்தியை விட ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு அதிகம் உள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி கட்சி தற்போது தேர்தலில் நின்றால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரசுக்கு 3-வது இடம்தான் கிடைக்கும். ஆந்திர விவசாயிகளின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜெகன்தான். சந்திரபாபு நாயுடுவை யாரும் நம்பத் தயார் இல்லை என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+