தொடர் ரெய்டுகளைக் கண்டித்து டெல்லி வெங்காய வியாபாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
டெல்லி: வெங்காய மண்டிகளில் தொடர்ந்து நடந்து வரும் ரெய்டுகளைக் கண்டித்து டெல்லி வெங்காய வியாபாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
நாடு முழுவதும் வெங்காயம் கடுமையான விலை உயர்வைக் கண்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். வெங்காயப் பதுக்கலே இதற்கு முக்கியக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மொத்த வியாபாரிகளிடம் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டெல்லியிலும் இந்த ரெய்டு தொடர்ந்து வருகிறது. இதற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய காய்கறி மற்றும் பழச் சந்தையான டெல்லி ஆசாத்பூர் மண்டி வியாபாரிள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரெய்டுகளால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும், நற்பெயர் கெடுவதாகவும் கூறி அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து வியாபாரிகள் மீது எஸ்மா சட்டம் பிரயோகிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
வரி ஏய்ப்பு என்ற பெயரில் இந்த ரெய்டுகளை வருமான வரித்துறை நடத்துகிறது. சோதனை என்ற பெயரில் எங்களை பல்வேறு வகையில் தொல்லைக்குள்ளாக்குகிறார்கள். இதனால் தொழில் செய்ய முடியவில்லை. இந்த சோதனைகளை நிறுத்தக் கோரியே இந்த ஸ்டிரைக் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் ஸ்டிரைக்கைக் கைவிடாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மாநில அரசு எச்சரித்துள்ளது.
வெங்காய வியாபாரிகளின் இந்த திடீர் ஸ்டிரைக்கால் டெல்லியில் வெங்காய விலை மேலும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications