விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் திட்டியதால் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம் : பொது மக்கள் திட்டியதால் மூங்கில்துறைப்பட்டு பெண் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தவர் செல்வக்கன்னி.
மூங்கில்துறைபட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி மக்கள் செல்வக்கன்னியிடம் வந்து புகார் கூறுவார்கள். அவ்வாறு இன்றும் அவரிடம் வந்து தண்ணீர் பிரச்சனை, மோட்டார் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகள் குறித்து சத்தம் போட்டுள்ளனர்.
ஊர்மக்கள் திட்டியதால் மனம் உடைந்த அவர் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications