திருடனைப் பிடித்தால் பரிசு-தமிழக போலீஸாருக்கு பெங்களூர் போலீஸ் 'ஆபர்'!
பெங்களூர்: பெங்களூரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த திருச்சியைச் சேர்ந்த கும்பலைப் பிடிக்க முடியாத அளவுக்கு தமிழக காவல்துறையில் சிலர் இடையூறாக இருப்பதால், அந்தக் கும்பலைப் பிடித்துத் தந்தால் ரூ. 50,000 பரிசு தருவதாக தமிழக காவல்துறைக்கு, பெங்களூர் போலீஸ் தெரிவித்துள்ளதாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் டிவிஜி சாலையில், டாக்டர் பொம்மையா என்பவரின் காரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனர் திருட்டுப் போனது.
பணம் கீழே கிடக்கிறது என்று பொம்மையாவின் கார் டிரைவரிடம் கூறிய ஒரு நபர், டிரைவர் கீழே இறங்கி, அந்த மர்ம நபர் போட்ட போலி கரன்சிகளை எடுத்தபோது ஸ்கேரனை திருடிச் சென்று விட்டார்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதேபாணியில் மேலும் சில குற்றச் செயல்களும் நடந்தன. அனைத்திலும், திருச்சிக் கும்பல் தொடர்புடையதாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தக் கும்பலைப் பிடிக்க திருச்சி போலீஸாரின் உதவியை பெங்களூர் போலீஸார் நாடினர். ஆனால் பலன் இல்லை. இந்த சமயத்தில்தான், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு, திருச்சி காவல்துறையைச் சேர்ந்த சில காவலர்கள் உடந்தையாக இருப்பதாக பெங்களூர் போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளதாம். மேலும் திருட்டுப் பொருட்களை திருச்சி போலீஸார் சிலர் பெற்றுக் கொள்வதும் தெரிய வந்துள்ளதாம்.
இதுகுறித்து பெங்களூர் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இங்கிருந்து திருடிச் செல்லும் பொருட்களை திருச்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில போலீஸாரிடம் திருடர்கள் கொடுக்கிறார்கள். அதை வாங்கும் போலீஸார், அங்குள்ள ராம்ஜி நகரில் உள்ள விற்பனையகங்களில் விற்று காசு பெறுகிறார்கள். பின்னர் திருடர்களுக்கு ஒருதொகையை கமிஷனாகவும் தருகிறார்கள்.
இது எங்களுக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து திருடர்கள் தரும் பணத்தை நாங்கள் தருகிறோம். அதாவது ரூ. 50,000 வரை பரிசு போல தருகிறோம். அந்த திருடர்களைப் பிடித்துக் கொடுத்து விடுங்கள் என்று திருச்சி போலீஸாருக்குத் தகவல் அனுப்பியுள்ளோம் என்று கூறினர்.
தமிழக போலீஸாருக்கு இப்படி ஒரு சோதனையா?
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications