சிங்கள கடற்படை வெறிச்செயல்-துப்பாக்கிச் சூட்டில் தரங்கம்பாடி மீனவர் பலி

Subscribe to Oneindia Tamil

Tharangambadi
புதுக்கோட்டை: சிங்கள இனவெறி கடற்படையின் குண்டுகளுக்கு மேலும் ஒரு தமிழக மீனவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (20). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.

இந்திய கடல் எல்லைக்குள் 14 கடல் மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த சிங்கள இனவெறி கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடந்தது.

உயிரிழந்த பாண்டியனின் உடலுடன் மற்ற மீனவர்கள் கரைக்கு விரைந்தனர். பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரவியதும் ஜெகதாப்பட்டினமே கடற்கரையில் திரண்டு விட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு கிளம்பியது.

அனைத்து மீனவர்களும் பாண்டியனின் உடலுடன் ராமேஸ்வரம்-நாகப்பட்டனம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் குதித்தனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து மீனவர்களை சமாதானப்படுத்தினர். பாண்டியன் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிங்கள கடற்படையின் இந்த வெறிச் செயலால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டுமல்லால், ராமநாதபுரம், நாகப்பட்டனம் மாவட்டமீனவர்களும் கடும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிங்கள கடற்படையின் அத்துமீறல்களுக்கும், அநியாய கொலைகளுக்கும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சிங்கள கடற்படை இப்போதெல்லாம் இந்தியப் பகுதிக்குள்ளும் புகுந்து தாக்கி வருகிறது. ஆனால் இதை ஒருமுறை கூட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தடுத்ததில்லை. ஒரு முறை கூட இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து இந்தியப் படைகள், இந்திய மீனவர்களைக் காத்ததில்லை.

இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் ரத்தத்தைக் குடித்து விட்டது இலங்கைக் கடற்படை. ஆனாலும் கடலுக்குள்ளேயே போக முடியாத அளவுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து தங்களைக் காப்பாற்ற ஒரு நாதியும் இல்லாத நிலையில் தமிழக மீனவர்கள் பெரும் மனக் கொதிப்புடன் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு உயிரைப் பறித்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+