சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 1150 நச்சு வாயு சிலிண்டர்கள் பறிமுதல்
தூத்துக்குடி: சீனாவில் இருந்து வந்த நச்சுத்தன்மை வாய்ந்த 1150 காஸ் சிலிண்டர்களை தூத்துக்குடி வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இறக்குமதி செய்யத் தடை செய்யப்பட்டுள்ள ஆர் 22 என்ற காஸ் சிலிண்டர்கள் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்படுவதாக வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய்துறை புனலாய்வு இயக்குநர் ராஜன், துணை இயக்குனர் அமல்ராஜ், கண்காணிப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், ராஜூ மற்றும் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வந்த கன்டெய்னர்களை சோதனையிட்டனர். இதில் சீனாவில் இருந்து பாலக்காட்டில் உள்ள ஷெய்ன் டிரேட் லிங்க் என்ற நிறுவனத்துக்கு வந்துள்ள கன்டெய்னரை சோதனையிட்டனர்.
அதற்குரிய ஆவணங்களில் பெண்டா புளோரா ஈத்தேன் என்ற காஸ் சிலிண்டர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த காஸ் சிலிண்டர்களில் இருந்த காஸை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததுக்கு பதிலாக இறக்குமதி தடை செய்யப்பட்ட கொடிய குளோரா டை ப்ளோரா மீத்தேன் நிரப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த வாயு ஆர் 22 என அழைக்கப்படுகிறது. இதனால் அந்த கன்டெய்னரில் இருந்த ஆர் 22 நிரப்பப்பட்டிருந்த 1150 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும்.
இதில் தொடர்புடைய பாலக்காடு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலிண்டர்களை சீனாவுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications