நெல்லையில் மூளைச் சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
நெல்லை: நெல்லையில் மூளைச் சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
மூளைச் சாவு ஏற்பட்ட சென்னையைச் சேர்ந்த மாணவர் ஜிதேந்திரனின் உடல் உறுப்புகள் கடந்த ஆண்டு தானம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மூளைச் சாவு அடைகிறவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அவ்வாறு நெல்லையில் இதுவரை 3 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. தற்போது பெண் ஒருவரின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற மகன் உள்ளார். அரிகிருஷ்ணன் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார்.
இதனால் அவர் குடும்பத்துடன் வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக அவரது மனைவி மாலதி இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கடந்த 10-ம் தேதி மயக்கமடைந்த மாலதியை நெல்லையி்ல் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச் சாவு அடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மாலதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் அரிகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர். நேற்று காலை மாலதியை நெல்லை சந்திப்பில் உள்ள கிட்னிகேர் சென்டருக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து மாலதியின் இரு கிட்னி, இருதயம் மற்றும் கண் ஆகியவற்றை அகற்றினர். இதில் ஒரு கிட்னி திருச்சி ஏபிசி தனியார் மருத்துவமனைக்கும், மற்றொன்று நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது.
இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்களை அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர்கள் எடுத்துச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications